Monday, 4 August 2008

மிஹின் எயார் - பயணிகளை நிர்க்கதியாக்கியிருகிறது

குறைந்த செலவில் பயணங்களை மேற்கொள்ள எதிபார்த்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை மிஹின் எயார் நிறுவனம் நிர்க்கதியாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏனைய விமான சேவை நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவு கட்டணங்களை அறவிட்டுவந்த மிஹின் எயர் திடீரென தமது சேவையை இடைநிறுத்திக் கொண்டமை பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.


நிர்வாகத்திறன் இன்மை, போதிய நிதியின்மை போன்ற காரணிகளினால் மிஹின் எயார் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் சாதாரண தொழிலாளர்கள் தமது பயணங்களுக்காக மிஹின் எயார் சேவையை பெரிதும் நம்பியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஏற்கனவே விமாணச் சீட்டுக்களை பதிவு செய்த பயணிகள் மற்றும் பயண முகவர் நிலையங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments: