இலங்கையில் டசின் கணக்காண தமிழர் ஒருவருடங்களுக்கு மேலாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்பான கியூமன் ரைட்ஸ் வோச் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை முடிவுக்கு கொண்டு வருமாறு அந்த அமைப்பு அதிகாரத்தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டது முதல் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுதியது.
அமைச்சரின் இந்த கொலை குற்றச்சாட்டை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் மேல் சுமத்தியது. தற்போது அவசரகால சட்டத்தின்மூலம் இலங்கை படையினருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சோதனை, கைதுகள், சொத்துக்களை பறிமுதல் செய்தல், உத்தரவாதமின்றிய கைதுகள், தனிப்பட்ட ரீதியில் எந்த வித விசாரணைகளுமின்றி 12 மாதங்கள் தடுத்து வைத்தல் போன்ற அதிகாரங்கள் இதில் அடங்கும் என கியூமன் ராட்ஸ் வோச் அமைப்பின் ஆசிய வலய பணிப்பாளர் பிராட் எடம்ஸ் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment