Saturday 9 August 2008

ஊளல் மன்னனை மகிந்த ஒலிம்பிக் பார்க்க அழைத்துச்சென்றது ஏன்?

பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 5இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட திறைசேரியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.


இதுசரியான நடைமுறையா? இவ்வாறு நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். பொதுச்சொத்தை விரயம் செய்த ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதி இவ்வாறு கௌரவத்தை கொடுப்பது ஏற்புடையதல்ல


இவ்வாறான செயற்பாடுகள் இந்நாட்டு மக்களினதும் படையினரினதும் மனநிலையை பாதிப்படைய செய்யும் இவ்வாறான அநியாயங்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுகின்ற பௌத்த பிக்குகளும் இதை எதிர்க்கின்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்றனர்.


பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அன்றி இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.


நாடாளுமன்றில்இடம்பெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

✪சிந்தாநதி said...

http://tamil.kanimai.com/

தமிழ்.கணிமை ஒலிம்பிக் திரட்டியில் இந்த இடுகை திரட்டப்படுகிறது