தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தினர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதாக அரசாங்கத் தரப்பினர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலரது குடும்பத்தினர் மட்டுமே தற்போது இலங்கையில் வசித்து வருவதாகத் அந்த தகவல்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் கூட நிறுத்தப்பட்டுள்ளதாகவம் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சார்க் பயங்கரவாதத் தடுப்பு திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அரசாங்தரப்பு கூறியுள்ளது.
Tuesday, 12 August 2008
TNA - பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்பங்கள் வெளிநாட்டில் - அரசாங்கதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment