நேற்று முன் தினம் சனிக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் அனைத்துலக தொடர்பக துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் 1ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளும் யேர்மன் வாழ் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொதுச் சுடரினை யேர்மன் தமிழ்க்கல்விக்கழகப் பொறுப்பாளர் இ.நாகலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து நாட்டுப்பாற்றளர் கணேஸ்வரன் அவர்களின் துணைவியார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்கான ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் திருமதி கலாநாயகியின் துணைவனர் சூரியகுமார் ஏற்றி வைத்தார் லெப்.கேணல் கலையழகனுக்கான ஈகைச்சுடரினை மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. ஆனந்தன் ஏற்றி வைத்தார் இதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின
எழுச்சி நடனங்கள்,ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்,நாடகம் என்பவற்றுடன் தமிழீழ உணர்வாளர் பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பழ.நெடுமாறன் அவர்களால் தேனிசைச் செல்லப்பா அவர்களின் தலைவா ஆணைகொடு எனும் இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பழ.நெடுமாறன் அவர்களைக் கௌரவித்து யேர்மன் வாழ் தமிழீழமக்களின் சார்பில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் பட்டயம் ஒன்றும் வழக்கப்பட்டது.

No comments:
Post a Comment