பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான என்னையே இந்த அரசு புலியாக்குறதென்றால் இந்த நாட்டு மக்களின் நிலையென்னவென்பதை எண்ணிப்பார்க்கும்போது கவலையேற்படுவதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான சந்திரசேகரன் தெரிவித்தார்.
புலிகளுக்கு எதிரான கட்சி எமது ஜே.வி.பி. நாம் புலிகளுக்கு எதிராக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்.
புலிகளுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொள்ள அமைப்புகளை உருவாக்கினோம். வெளிநாடுகளுக்குச் சென்று எவ்வளவு வெளிநாட்டு அரசியல்வாதிகளைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்தித்து புலிகள் தொடர்பாகவும் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தோம். ஆனால் இன்று இந்த அரசாங்கம் ஜே.வி.பி.யை புலியென்கிறது.
Saturday, 26 July 2008
புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை ஜேவிபி சந்திரசேகரனும் உறுதிப்படுத்துகிறார்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment