Sunday, 6 April 2008

கிழக்கு ஐரோப்பியாவில் ஏவுகணை எதிர்ப்புத் தொகுதியை அமெரிக்கா பரவலாக்குவது குறித்து, இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கும் வர வில்லை--(வீடியோ இணைப்பு)

ரஷிய அரசுத் தலைவர் புத்தினும் அமெரிக்க அரசுத் தலைவர் புஷும், ரஷிய மற்றும் அமெரிக்க உறவின் உத்திபூர்வ கட்டுக்கோப்பு பற்றிய அறிக்கையை இன்று வெளியிட்டனர். கிழக்கு ஐரோப்பியாவில் ஏவுகணை எதிர்ப்புத் தொகுதியை அமெரிக்கா பரவலாக்குவது குறித்து, இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கும் வர வில்லை.

இரு தரப்பினரும் ரஷியாவின் தென் பகுதியிலுள்ள Sochi நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு உறவின் வளர்ச்சி, நேட்டோவின் கிழக்கு நோக்கி விரிவாக்குவது, மத்திய கிழக்கின் நிலைமை, கொசோவோ பிரச்சினை, ஏவுகணை எதிர்ப்புத் தொகுதி முதலியவை குறித்து, இரு தரப்பினரும் விவாதம் நடத்தினர். பேச்சுவார்த்தை மூலம், இரு நாடுகளுக்குமிடையிலான கருத்து வேற்றுமைகளை தீர்க்க மேலும் பாடுபடும் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஏவுகணை எதிர்ப்புத் தொகுதி பிரச்சினையில், இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேற்றுமை குறைக்கப்படவில்லை. போலந்து, செக் ஆகிய நாடுகளில் ஏவுகணை எதிர்ப்புத் தொகுதியின் பரவலை அமெரிக்கா தொடர்ந்து தூண்டும் என்று புஷ் கூறினார். ரஷியாவின் எதிர்ப்பு நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, அமெரிக்காவுடன் கூட்டாக இப்பிரச்சினையை தீர்க்கும் என்று புத்தின் தெரிவித்தார்.

Apr. 5 - Russia's Vladimir Putin welcomes U.S. President George W. Bush to his Black Sea home at the start of a farewell summit

President Bush had said he was looking forward to a last "heart-to-heart" with the Russian leader before he leaves the Kremlin next month, and the two men hugged as they greeted each other outside Putin's holiday villa in the resort of Sochi.


No comments: