Sunday, 6 April 2008

குசேலனில் ஜப்பான் நடிகர்கள்

மினிமம் பட்ஜெட், குறைந்த கால தயாரிப்பு என்று சொல்லிதான் 'குசேலனை' ஆரம்பித்தார்கள்.

ஆனால், ரஜினி படம் என்பதால் ஆர்வம் மிகுதியால் மிக பிரமாண்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறதாம் படம். பட்ஜெட்டும் எக்கச்சக்கமாய் எகிறிக்கொண்டிருக்கிறதாம்.

முன்பு, ரஜினிக்கே கவுரவ வேடம் தான் என்றார்கள். ஆனால், தற்போது அவர் வரும் காட்சிகளில் சேர்ந்து நடிப்பவர்களின் பட்டியல் பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு என நீண்டுகொண்டே போகிறதாம்.

இதுதவிர, ரஜினிக்கு ஜப்பான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அங்குள்ள சில நடிகர்களையும் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம் வாசு.

ஆக, இந்த முறை சிஙகம் சிங்கிளாக வராமல், ஜப்பான் நாட்டு சிங்கம் மற்றும் சிறுத்தைகளுடன் சேர்நது பெருங்கூட்டமாக வருகிறது.

No comments: