Wednesday, 16 April 2008

இலங்கையில் மேற்கிளம்பிவரும் சமூக விரோதச் செயல்களும் தொடரும் கொலைகளும்.

அம்பலாங்கொடையில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் பாதாள உலகக் குழுவினர் எனவும், இவர்கள் இருவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் சுமந்தப்பட்டு வழக்குகள் பதிவில் உள்ளன எனவும் அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றும் ஒரு சம்பவம் எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது தப்பிக்க முயன்ற பிரபல கேடி பிளைக் மரியா என்பவரும் சிறைக்காலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 8.00 மணியளவில் கொழும்பு பொரளைப் பகுதியில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலில் இளைஞன் ஒருவன் கொல்லபட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் 28 வயதுடைய ரவீந்திர குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments: