Tuesday, 15 April 2008

விமல் அணியினர் தனியான ஆசனங்களை கோரியுள்ளனர்.

ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவுடன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் தனியாக அமர்வது என தீர்மானித்துள்ளதாக விமல் அணியைச் சேர்ந்த களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை தம்முடன் இணைத்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது கருத்துக்கு செவிகொடுத்து உரிய தீர்வை பெற்று தந்தால் மாத்திரமே தமது அணி மீண்டும் ஜே.வீ.பீயில் இணையும் எனவும் ஜயந்த சமரவீர கூறினார்.

1 comment:

ttpian said...

Are(Vimala) they sure,they will not take back "seats" to their Home?