Tuesday, 22 April 2008

முகமாலையில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: டாக்கி தகர்ப்பு: ஏவுதளங்கள் மீது புலிகள் தாக்குதல்

வடபோர்முனை முகமாலையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் காலாற்படை மற்றும் கவசப் படையினர் இந்த முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல்குழல், ஆட்டிலறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் கனரக ஆயுதங்களில் சூட்டாதரவும் வழங்கப்பட்டன.

மோதல்கள் ஆரம்பித்து 30 நிமிட நேரத்த்தில் விடுதலைப் புலிகளினால் ரி-55 டாக்கி தாக்கியழிக்கப்பட்டது.

அத்துடன் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை அடுத்து காலாற்படையினரும் கவசப் படையினரும் தங்களது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் சிறீலங்காப் படையினரின் ஆட்டிலறி ஏவுதளமும், எழுதுமட்டுவாலில் உள்ள சிறீலங்காப் படையினரின் மோட்டார் ஏவுதளம் மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியதாக விடுலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் எழுதுமட்டுவாள் மோட்டார் ஏவுதளம் எரிந்துள்ளது எனவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment: