வவுனியாவில் இராணுவக் கட்டளைத் தலைமையக வளவிற்குள் இராணுவச் சிப்பாயொருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தலைமையகத்திலுள்ள காவலரண் ஒன்றினுள்ளேயே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இது தொடர்பான மரண விசாரணையை நடத்திய மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் மேலதிக விசாரணைகளை நடத்துமாறு வவுனியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sunday, 20 April 2008
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment