திருகோணமலைத் துறைமுகம் பாதுகாப்பானதா? இலங்கையிலுள்ள ஏனைய துறைமுகங்கள் பாதுகாப் பானவையா? என்ற கேள்விகளைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் முன்வைக் கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இவ்வாறு ""த பொட்டம் லைன்'' ஆங்கில வார ஏடு கேள்வி எழுப்பி யுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற் றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
திருகோணமலை துறைமுகத் தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப் பல் மூழ்கடிப்பட்டமையானது இலங் கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான படையி னர், தமது காவல் அரண்களில் கடந்த சனிக்கிழமை காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால்,விடுத லைப் புலிகளின் லெப்.கேணல் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கொமொண் டோக்கள் தாக்குதலுக்கு ஆயத்தமா னார்கள். இத்தாக்குதலுக்கு முன்னர் அவர்கள் துறைமுகத்தின் நடவடிக் கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்துள்ளனர்.
நீரடி நீச்சல் பிரிவினர் வெடிகுண்டுடன் துறைமுகத்தை நோக்கி நகர்ந்தபோது, கடற்படையினரின் ""சக்தி'' என்ற விநியோகக் கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.
முன்னர் கிறீக் தேசத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த "எம்.வி.இன்வின்சி பிள்' என்ற விநியோகக் கப்பல் துறை முகத்தில் இருந்து அரை மைல் தொலை வில் நிறுத்தப்பட்டிருந்தது. 83 மீ.நீள மும், 12 மீ.அகலமும் உடைய இக்கப் பல் 3,200 தொன் நிறையை எடுத்துச் செல்லக்கூடியது. எனினும் கடற்புலி கள் ""சக்தி'' என எண்ணி இக்கப்பலை தவறுதலாகத் தகர்த்து விட்டனரா என்ற சந்தேகமும் கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2.15 மணிக்கு தாக்கப்பட்ட கப்பல் அதிகாலை 4.30 மணியளவில் மூழ்கியது.
இத்தாக்குதல் நடைபெற்ற போது கடற்படையினரின் 10 சுற்றுக்காவல் படகுகள் தேடுதல் வெளிச்சம் பாய்ச் சியபடி துறைமுகப் பகுதிகளில் தேடு தலில் ஈடுபட்டிருந்தன.
ஆனால் அவற்றால் விடுதலைப் புலிகளைக் கண்டறிய முடியவில்லை. இப்படகுக ளில் சோலார் கருவிகள் இருக்கவில்லை. இக்கருவிகள் நீருக்கு அடியிலான தாக் குதலைத் தடுப்பதற்கு உரியவை.
பொருளாதாரப் பாதிப்புகளைத் தருமா?
2007ஆம் ஆண்டு கடற்படையி னர் மேற்கொண்ட ஆழ்கடல் நடவடிக் கைகளின்போது இக்கப்பல் விநியோ கங்களை மேற்கொண்டிருந்தது. விடு தலைப் புலிகளின் இத்தாக்குதல் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக் களை ஏற்படுத்தவல்லது.
வர்த்தக கப் பல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் இலங்கைக்கு வரும் கப்பல்களின் காப்புறுதி தொகையை அதிகரிக்கச் செய்யும். அது பொருளாதாரத்தில் கடு மையான பாதிப்புக்களை ஏற்படுத் தும்.
கொழும்பு மற்றும் காலி துறை முகங்களும் ஆபத்தான துறைமுகங் களாக தரப்படுத்தப்படலாம். திருகோணமலை துறைமுகம் பெரும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண் டது.
இத் துறைமுகத்தின் தென்பகுதி பாதுகாப்பு வலையைக் கொண்டது அல்ல. துறைமுகத்தின் வடபகுதி பாதுகாப்பு வலைகளைக் கொண்டுள்ள போதும் அதிலும் பல குறைபாடுகள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
Friday, 16 May 2008
திருகோணமலைத் துறைமுகத்தில் இன்னமும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை! --"த பொட்டம் லைன்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment