கொழும்பு கோட்டையில் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு பொருத்திய வாகனம் பிள்ளையானை இலக்கு வைக்க கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அரசாங்க புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்கும் பொருட்டு, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொழும்புக்கு சென்றுள்ளார். குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பிள்ளையான் பதவியேற்க லோட்டஸ் வீதியூடாக செல்லாம் என குண்டுதாரி நினைத்திருக்கலாம் எனவும் புலனாய்வுதுறையினர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலக்கு தவறியதால், குண்டுதாரி காவல்துறையினரின் பேரூந்தை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியிருக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
source:குளோபல் தமிழ்செய்தி
Friday, 16 May 2008
கோட்டையில் வெடித்த குண்டு பிள்ளையானை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment