Saturday, 10 May 2008

கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள்: - ஜிகாத் முஸ்லிம் தீவிரவாத குழு

தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளது.

காலை கிழக்கு மாகாணத்தின் தமிழ் பிரதேசங்களிலும் வெள்ளைவானில் வந்தோரால் இந்த பிரசுரம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில தமிழ் பிரதேசங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளர் ரவூப் ஹக்கீமுக் ஆதரவாக இந்த பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கின்றபோதிலும் தமிழ் பிரதேசங்களிலும் முஸ்லிம் பிரதேசங்களிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்குகள் அளிக்கப்படாமல் செய்வதற்கோ இந்த பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கில் கருணா –பிரபா பிரிவு வெறும் நாடகம் என தெரிவித்துள்ள அந்த பிரசுரத்தில் பிள்ளையான் பிரபாகரனின் செல்லப்பிள்ளையெனவும் தெரிவித்துள்ளது.

‘கிழக்கு மண்ணில் உள்ள தமிழர்களை வன்னிக்கு விரட்டியடிப்போம். பிரபாகரனுக்கு பாடம் புகட்ட இதுதான் தருணம்.வடக்கில் இருந்து 24மணிநேரத்தில் எமது முஸ்லிம் உறவுகள் விரட்டப்பட்டார்கள்.நாம் தமிழர்களை 12 மணித்தியாலத்தில் விரட்டியடிப்போம்.நாம் பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது.என அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு கிழக்கில் தமிழர்கள் மீதான படுகொலைகளில் 1980-90களில் ஈடுபட்டுவந்தவேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வலு நிலை காரணமாக அந்த அமைப்பு அழிக்கப்பட்டது.

இந்த அமைப்பை அண்மைக்காலமாக சீர்செய்யும் நடவடிக்கையில் அமைச்சர் அதாவுல்லாவும் அமைச்சர் அமீர் அலியும் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்மையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ் பெண்களை மானபாங்கப்படுத்தும் நடவடிக்கையில் இந்த அமைப்பு படையினருடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: