வவுனியா அரசாங்க நிறுவனமொன்றில் கடமையாற்றும் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (மே12) இரவு இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார். வவுனியா மன்னார் வீதியில் வேப்பங்குளத்தை வசிப்பிடமாகக் கொண்ட 29 வயதுடைய பாலசிங்கம் பாலகுமார் என்ற இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். பாலமோகனின் வீட்டிற்கு வெள்ளை வானில் சென்ற 6 பேர் அவரை பலவந்தமாக வானில் ஏற்றிச் சென்றதாக அவரது மனைவி காவற்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பு கதிரேசன் வீதியில் மலையக இளைஞர் உள்ளிட்ட 3 இளைஞர்கள் மே 10 ஆம் திகதி சனிக்கிழமை கடத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை; 23 வயதுடைய பரமநாதன் துஸ்யந்தன், கே.வசீகரன் ஆகியோர் கடத்தப்பட்டதாக இவர்களின் பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர். மே 11ம் திகதி கொழும்பில் பிரபல பொருளியல் ஆசிரியர் வரதராஜன், அவரது மைத்துனர் சிறீதரன் மே 12ல் புத்தளத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவரும் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, 13 May 2008
வவுனியா அரசாங்க நிறுவனமொன்றில் கடமையாற்றும் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (மே12) இரவு இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment