அக்கரைப்பற்று மக்கமடி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் அப்பகுதியின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களினால் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வழமை நிலை பாதிப்படைந்திருந்தது. இந்த மோதல் இரு அரசியல் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் 15 காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சம்மாந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல்களின் போது பல சொத்துச் சேதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment