Tuesday, 13 May 2008

பிள்ளையானுக்கு எதிராக வாக்களித்தோர் தாக்கப்படும் போது காவல் துறை உறக்கத்தில்! -ajeevan

கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிவுற்ற தேர்தலில் பிள்ளையானுக்கு எதிராக வாக்களித்த கல்லாறு மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் புகுந்த பிள்ளையான் குழுவினர் மக்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இத் தாக்குதல்களை டீஎம்வீபீயின் காரியாலய பொறுப்பாளரான சின்தூரன் தலைமை ஏற்று நடத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தாக்குதல் பேயாட்டம் கடந்த 11ம் திகதி முதல் இன்று வரை தொடர்வதாகவும் போலீஸில் புகார் செய்தால் கொலை செய்யப்படுவதாக பிள்ளையான் குழுவினர் எச்சரிப்பதால் பீதியில் மக்கள் போலீஸில் புகார் தொடுக்காமல் இருக்கின்றனர்.

குகநாதன் எனும் அபேட்சகரின் ஆதரவாளர்கள் இப்படியான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

பிள்ளையானுக்கு எதிராக வாக்களித்த மக்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக இரவுகளில் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: