மிஹின் எயார் நிறுவனத்தின் மூலம் 320 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்வி ஒன்று பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை மிஹின் எயார் விமான சேவைக்கு வெளிநாட்டில் இருந்து விமானங்களை வாடகைக்கு பெற முடியாத நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இரண்டு விமானங்களை வாடகைக்கு பெற முடியாதா என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இது குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக குறிப்பிட்டார்.
Tuesday, 6 May 2008
மிஹின் எயார்: 320 கோடி ரூபா இழப்பு:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment