வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் வவுனியா மாவட்டத்தின் புளொட் இயக்க முக்கியஸ்தரான 5 பிள்ளைகளின் தந்தை செல்வராசா பவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் புளொட் காரியாலைய நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ய சென்ற வேளை இன்று மாலை 5.30 அளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற் கிளைமோர் குண்டு வெடிபபு ஒன்றில்; இரண்டு பேர் கொல்லப்பட்டனர் இவர்களில் ஒருவர் 53 வயதான சுந்தரலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார் மற்றையவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவத்தில் ஒருவா காயமடைந்தார். படையினரின் ட்ரக் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை முகமாலையில் நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது மீட்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று கொடிகாமம் காவற்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது 25 – 30 வயது மதிக்கத்ததக்க இந்த சடலம் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என வைத்தியசாலைத் தரப்பு தெரிவிததுள்ளது.
Tuesday, 6 May 2008
இலங்கையின் வடக்கில் நால்வர் கொலை:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment