Tuesday, 27 May 2008

பிலிபைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மார்கோசை போல மகிந்தவும் வீட்டுக்கு அனுப்பபப்படுவார்-சோமவன்ஸ

சிறைச்சாலைகளின் மதில் சுவர்கள் தம்மை விட உயரமானவை அல்ல என ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட குற்றம் தொடர்பில் தன்னை கைதுசெய்யும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை மாத்திரமல்ல ரில்வின் சில்வாவையும் பழைய குற்றங்களுக்காக கைதுசெய்யும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்க பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் பிலிபைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மார்கோசை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அந்த நாட்டு மக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஜே.வீ.பீயின் 5வது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments: