Thursday, 15 May 2008

விமலின் புதிய கட்சியான தேசிய சுதந்திர முன்னணி ஆரம்பித்த முதல் நாளிலே மோசடி அம்பலம்

தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகளுக்கான மண்டபத்தை ஒதுக்கீடு செய்வதில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப அதிகாரிகளிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து மண்டபம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகள் நேற்றைய தினம் (மே14) பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் எந்தவொரு அரசியல் நிகழ்வும் நடாத்தப்படக்கூடாதென மண்டப யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தில் 6ம் சரத்திற்கமைய எந்தவொரு அரசியல் நிகழ்வும் பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் நடைபெறாதெனத் தெரியவருகிறது.

படைவீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான நிகழ்வொன்றுக்கெனக் கூறி பண்டபத்தை மானெல் மலர் அமைப்பு ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.


அரசியல் நிகழ்வொன்றிற்காக மண்டபத்தை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பண்டாரநாயக்க மண்டப உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments: