கிழக்கில் நடத்தப்பட்ட தேர்தல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோரினது கொடும்பாவிகளை எரித்தனர்.
கொழும்பு மருதானையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
மருதானைச் சந்தியில் பிற்கல் 1:00 மணியளவில் தொடங்கி 2:00 மணிவரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் கிழக்கு தேர்தலில் நடந்த முறைகேடுகளைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காணப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும் கோசம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அப்பகுதியில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதி ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆரப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment