Friday, 16 May 2008

கிழக்கு முதலமைச்சர் நியமனம் சட்டவிரோதமானது: ஹிஸ்புல்லா

hisbulla-mahintha.jpgகிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் சட்டவிரோதமானது என முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். தாமும் தனது அணியை சேர்ந்த மேலும் இரண்டு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், அரசாங்க தரப்பும் பிள்ளையானை முதலமைச்சராக நியமித்துள்ளனர். இதன்மூலம் ஜனாதிபதியும், அரசாங்கமும் முஸ்லீம் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். இதில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தன்னை மாத்திரம் ஏமாற்றவில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கிழக்கில் உள்ள முழு முஸ்லீம் சமூகத்தையும் 12 முஸ்லீம் அமைச்சர்களையும் ஏமாற்றியுள்ளதாக ஹிஸ்புல்லா விசனம் தெரிவித்துள்ளார்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: