கெப்பிட்டிகொலாவவில் கிராமப் புறங்களின் பாதுகாப்பை விஷேட அதிரடிப் படையினர் பலப்படுத்தி வருகின்றனர். இதனொரு கட்டமாக கெப்பிட்டிகொலாவ யக்காவெவ முன்னரங்க பாதுகாப்பு நேற்று வியாழக்கிழமை முதல் விஷேட அதிரடிப் படையினரின் கீழ் வந்துள்ளதாக விஷேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான கே.எம்.எல்.சரச் சந்திர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; யக்காவெவ கிராமப் பாதுகாப்பு அதிரடிப் படையினர் வசம் வந்துள்ளது. துட்டுவெவ முதல் மாணிக்கவெவ வரையான ஏழு கிலோமீற்றர் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளின் பாதுகாப்பும் நேற்று முதல் அதிரடிப் படையினர் வசம் வந்துள்ளது. இதற்காக அதிரடிப்படையினர் இங்கு நான்கு முகாம்களை அமைக்கவுள்ளனர். 20 காவல் நிலைகளுள்ள விகாரமுல்ல மற்றும் பத்துக்காவல் நிலைகளுள்ள தல்ககவெவ பகுதிகளிலேயே இந்த முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இப்பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விஷேட பாதுகாப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கிலிருந்து அண்மையில் விஷேட அதிரடிப் படையினர் வாபஸ்பெறப்பட்டு மணலாறு, கெப்பிட்டிகொலாவ மற்றும் அநுராதபுரம் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரிந்ததே.
Thursday, 15 May 2008
கெப்பிட்டிகொலாவ பாதுகாப்பு விசேட அதிரடிப்படையினரிடம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
is it possible for srilankan army to go against tamil community?
tigers will send them to hell r heaven(choice is from srilankan army)
Post a Comment