Wednesday, 21 May 2008

இலங்கையின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிடவில்லை பிள்ளையானுடன் டில்லிக்கு எந்தத் தொடர்பும் இல்லை--நீ சொல்வதை நம்ப தமிழன் என்ன முட்டாளா!!!

தொடர்புபற்றிய ஆதாரம் கீழே வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது பார்க்கவும்

* கொழும்பிலுள்ள தூதரக வட்டாரங்கள்

டிட்டோ குகன்

இந்தியா சார்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையானை எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்பு கொண்டிராத நிலையில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இந்தியாவை இழுத்து விடுவது என்பது ஆதாரமற்ற விடயமென இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு விடயத்தில் அதை உள்ளே இழுத்து விடுவது ஏற்புடையதாக இல்லையென்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கருத்து வெளியிட்டார்.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பிள்ளையான் தெரிவானது இந்தியா திரைமறைவிலிருந்து செய்த சதியென ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியிருந்ததுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபை முறைமை போன்ற விடயங்கள் தொடர்பாக அக் கட்சி இந்தியாவை கடுமையாக சாடி வருவது தொடர்பாகவே இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்களிலிருந்து மேற்கண்டவாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதேநேரம், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. அங்கு பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய பல உயர் பதவிகளை பொறுப்பேற்பவர்கள் மத சார்பற்ற ரீதியிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் இங்கு கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரோ அல்லது இந்து மதத்தை சார்ந்த ஒருவரோ வர வேண்டுமென்ற உள்நோக்கம் எதுவும் இந்தியாவுக்கு கிடையாது.

அது மட்டுமல்லாது, இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளையானை தொடர்பு கொண்டதில்லை. இந்த நிலையில் அடிப்படையின்றி இவ் விவகாரத்தில் இந்தியாவை உள்ளே கொண்டு வருவதானது, ஏற்க முடியாததொன்றாகும்.

அத்துடன், இலங்கையில் உள் விவகாரங்களில் தலையிடும் தேவையும் இந்தியாவுக்கு கிடையாது' என்றும் அவ் வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டின.

part-01



part-02

part-03

part-04



2 comments:

Anonymous said...

போடா நாடு இல்லாத அகதி நாயே பொத்திகிட்டு போடா தேவடியா பயலே

ttpian said...

wait for some time-singala community will seek asylum in other nations as refugees!
our land is Tamileelam-we will form it soon!
singala beggars may go to india for begging from bramin community!