வவுனியாவை வசிப்பிடமாகவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களை பிறப்பிடமாகவும் கொண்டவர்கள் மன்னாருக்கு வருவதில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
வவுனியா மற்றும் மதவாச்சி பகுதியில் இருந்து வரும் பயணிகள் பஸ் கட்டையடம்பன் சோதனைச் சாவடியில் நிறுத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து பயணிகளுடைய அடையாள அட்டைகள் கடுமையாக பரிசீலனை செய்யப்பட்டு கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களை குறிக்கும் பயணிகள் மீண்டும் திரும்பி அனுப்பபடுகின்றனர்.
நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை வவுனியாவில் இருந்து முருங்கன் பகுதிக்கு வந்த மூன்று மேசன் தொழிலாளர்கள் மாலை 4.25 மணியளவில் கட்டையடம்பன் சோதனைசாவடியில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய அடையாள அட்டைகளில் பிறப்பிடம் கிளிநொச்சி என குறிப்பிடப்பட்டிருந்தமையினாலேயே இவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment