வடபோர் அரங்கில், படையினரின் பாரிய நகர்வொன்று விடுதலைப் புலிகளால் முறிய டிக்கப்பட்ட பின்னர் மறுபடியும் சிறிய முன்ன கர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இயந்திரகாலாட்படையினரின் பக்க பலத்தோடு, ஆனை யிறவைக் கைப்பற்றுவதே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் திட்டம் என்று கூறப் படுகிறது.
செறிவான பின்தளச் சூட்டாதரவோடு, முன்னரங்கப் படைகளை நகர்த்தி, புதிதாக உருவாக் கப்பட்டுள்ள கவசப் படையணியினரை கைப் பற்றப்பட்ட இடங்களில் நிலை கொள்ளச் செய் வதே படையினரின் போர் உபாயமாகும்.
2006 ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட சமரில் 6 டாங்கிகளையும் கணிசமானளவு படையினரை யும் அரசு இழந்ததாகத் தெ?விக்கப்படுகிறது.
அண்மையில் நடந்த ?கமாலைச் சமரிலும் அதேயளவான படைக்கல ஆளணி இழப்புக் களை படையினர் சந்தித்திருப்பதாகக் கூறப்படு கிறது.
வழமைபோன்று பின்னடைவை சந்தித்த படைப்பிரிவின் கட்டளைத் தளபதி இடம் மாற் றம் செய்யப்பட்டு தனிநபரின் பலவீனத்தால் தோல்வி ஏற்பட்டது போன்றதொரு உளவியல் சமரை அரசு மேற்கொள்வதை முன்னைய சமர் படைப் பி?வும் வடமராட்சி தென்மராட்சியில் 52 ஆவது படையணியுமாக குடாவெங்கும் பரவிக் கிடக்கிறது 40 ஆயிரம் இராணுவம்.
12 கிலோ மீற்றர் நீள எல்லைக் கோட்டில் அமைந்துள்ள கிளாலி, முகமாலை, நாகர்கோ வில் முன்னரங்கில் 53, 55 ஆவது படையணி கள் நிலை கொண்டிந்தாலும் அண்மைய சமரில் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த படையினர் பங்கு கொள்ளவில்லை.
அதேவேளை கிளாலி, முகமாலை, கண்டல் வரையான பிரிகேட்டிலிருந்தே படைநகர் வினை படையினர் ஆரம்பித்தனர்.
இச்சமரில் படையினருக்கு கிடைத்த பெறு பேறுகளை உலகம் அறியும். அது குறித்து குடாரப்பு தரையிறக்கம், இத்தாவில் சமர் வழங்கிய அழித்தொழிப்புப் பரிமாணப் பதிவு கள், படையினரின் வரலாற்றில் இன்னமும் பேசப்படும் பகுதிகளாகும்.
அதேவேளை, முகமாலை முன்னரங்கு, தரைப் பகுதிகளால் சூழப்பட்டிருப்பதால் எதி ரியை இனங்காண்பதும் முறியடிப்புச் சமர் உக் கிரமாகவிருந்தால் இலகுவாகப் பின்வாங்கலா மென்பதும் இராணுவத் தளபதிக்கு தெளிவாகப்புரியும்.
இரவு பகலாக வட்டமிடும் ஆள் இல்லாத வேவு விமானங்களின் கண்களுக்கு விடுத லைப் புலிகளின் பகுதியிலுள்ள முன்னரங்க பதுங்கு குழி அமைப்பின் வடிவம் குறித்த விப கிழக்கு மாகாண சபை தேர்தலிற்கு முன்னர் திருமலையின் ஒரு பகுதியை விடுதலைப் புலி கள் கைப்பற்றினால், கிழக்கு மாகாணம் முழுவ தும் தனது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகக் கூறும் அரசியல் விளையாட்டு அடிபட்டுப் போகலாமென்கிற அச்சத்தின் வெளிப்பாடா கவே மணலாற்றுத் தாக்குதல்களை கணிக்கலாம்.
அவ்வாறு கிழக்கின் சில பகுதிகளை இழந் தால் சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் குறிக்கோள், சிதைவுறும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ஆனாலும் அரசின் அதிகார இருப்பிற் கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஏற்றவாறு விடு தலைப் புலிகள் தமது போரியல் உத்திகளை வகுப்பதில்லையென்பது வேறு விடயம்.
குறிப்பாக சர்வதேச, உள்நாட்டு அரசியல் மாற்றங்களைக் கணிப்பிட்டு அதற்கேற்றவாறு தமது இராணுவ உத்திகளை விடுதலைப் புலி கள் வகுத்து வந்ததை, கட்டுநாயக்கா, அநுராத புர விமானப் படைத்தள அழித்தொழிப்பு நட வடிக்கைகள் புலப்படுத்துகின்றன.
பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இராணு வத்திற்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்திய வாறு பின்னகர்ந்த விடுதலைப் புலிகள், 1999 நவம்பர் இரண்டாம் திகதி தமது தாய்ச் சமரிற்கான முதல் களமுனையை ஒட்டு சுட்டானில் திறந்தார்கள்.
தளபதி கேணல் ஜெயம் ஒட்டு சுட்டான் படைத்தள அழிப்பு நடவடிக்கையை வழி நடத் தினார். ஜெயந்தன், சோதியா படையணி நெடுங்கேணிப் பெருந்தளத்தை கைப்பற்றி யது.
கடந்த வாரம் நடைபெற்ற ஜெயந்தன் படை யணியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் அதன் சிறப்புப் தளபதி கேணல், கீர்த்தி, கூறிய கிழக்கு மாகாணம் பற்றிய கருத்துரைப்பினை தற்போது நினைவில் கொள்ளலாம்.
ஒட்டிசுட்டான், நெடுங்கேணிச் சமர்களை ஒருங்கிணைந்து வழிநடத்தியவர் கேணல் சொர்ணம். ஒட்டு சுட்டானிலிருந்து மாங்குளம் நோக்கிய நகர்வும், புளியங்குளம் நோக்கிய நகர்வும் சம காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.
களிலும் காணலாம்.
எத்தகைய தோல்விகள் கள?னையில் ஏற் பட்டாலும் தென்னிலங்கைக் கருத்துக் கணிப்பு கள், சிங்களத்தின் போரவாவை வெளிப்படுத் திய வண்ணள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மேற்கொள்ளும் கணிப்புக்களை, சர் வஜன வாக்கெடுப்புப் போன்று பூதாகரமாக்கு வது சிங்கள அரசியலிற்குத் தேவையான விடயந்தான்.
மறுதலையாக இப்பரப்புரைகள் யாவும், அதலபாதாளத்தை நோக்கிச் செல்லும் பொருளாதார வீழ்ச்சியினை மூடி மறைக்கும் கட மையை நேர்த்தியாகச் செய்கின்றன.
காட்ட (தேநீர்) ஹக்குறுவை (சக்கரை) கையி லேந்தி வாழ்வைக் கழித்த ஸ்ரீமாவோவின் முன்னைய இருண்ட ஆட்சிக்காலம், மறுபடி யும் திரும்பி வருகிறது.
வன்னியைச் சூழ, கிட்டதட்ட 60 ஆயிரம் படையினரைக் குவித்தவாறு, இந்த வருட இறு திக்குள் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடுமென்கிற கதையாடல் தொடர, மறுபுறத்தே தென்னிலங்கையில் பட்டினிப் போராட்டம் அரங்கேறுகிறது.
அதேவேளை தென்னிலங்கைச் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் வடபோர் அரங்கில் நூற்றுக்கணக்கான புலிகள் தின?ம் கொல்லப் படுவது போன்ற பரப்புரை ஊடாக, பேரின வாத மயக்க நிலைக்குள் சிங்கள மக்களை வைத்திருக்கும் திருப்பணியை செவ்வனே செய்கின்றன.
முகமாலை முறியடிப்புச் சமர் நிகழ்ந்த சில தினங்களில் வடபோர் கட்டளைத் தளபதி கேணல் தீபன் கூறிய கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகிறது.
மறுபடியும் ஆனையிறவைக் கைப்பற்ற இரா ணுவம் முயற்சித்தால் குடாநாட்டை அரசு இழக்க வேண்டிய நிலையேற்படுமென புலிகளின் தளபதி கேணல் தீபன் தெரி வித்த விடயம் உதாசீனப்படுத்த கூடிய விவகார மல்ல.
இதேபோன்று கடந்த முகமாலைச் சமரிற்கு முன்பாகவும் அவர் ஒரு கருத்தைத் தெ?வித்தி ருந்தார். அதாவது முகமாலை முன்னரங்க நிலையிலிருந்து ஒரு அங்குல நிலத்தைக் கூட படையினரால் கைப்பற்ற முடியாதென தீர்க்க மாக வெளிப்படுத்திய கருத்து களத்தில் மறுபடி யும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இம்?கமாலைச் சமரில் அவதானிக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயமொன்று உண்டு. நாகர்கோவில் முன்னரங்கில் முகாமிட் டுள்ள 53 ஆவது படையணியின் பின்தளம் மிருசுவிலில் உள்ளது. முகமாலையில் நிறுத்தப் பட்டுள்ள 55 ஆவது படையணியின் பின்தளம் வரணியில் பலமாகவுள்ளது.
அதேபோன்று வலிகாமத்தில் 51 ஆவது திரும்பவும் விலாவாரியாக விளக்குவதை விடுத்து நாகர்கோவிலினூடாக படை நகர்வு கள் ஏன் நடைபெறவில்லையென்பதைப் பார்க் கலாம்.
வருடத்திற்கு ஒரு தடவை, தமது பாரிய படைநகர்வினை முகமாலையூடாக முன்னெ டுக்கும் படையினர், நாகர்கோவிலில் சிறிய முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்வதை அவ தானிக்கலாம்.
ஏனெனில், பலாலி படைத் தளத்திற்கான பாதை, நாகர்கோவிலூடாக நகர்ந்து வட மராட்சி வரை நீண்டு செல்வதனை படை அதி காரிகள் புரிந்து கொள்கிறார்கள். நாகர்கோவில் முன்னரங்கின் இரு மருங்கிலும் கடலும் தரை யும் சேர்ந்துள்ளன.
ரங்கள் தெரியாதவாறு உருமறைப்புச் செய்யப் பட்டிருக்கலாம்.
நாகர்கோவில் பாதை பலாலிக்கும் மண லாற்று வாசல் திருமலை கடற்படைத் தளத்திற் கும் உணர்திறன் கூடிய விடயமாகவிருப்பதால் படையின?ன் கூ?ய பார்வை இந்த இரு முனைகளிலும் செலுத்தப்படும்.
ஆனாலும், வன்னியைச் சூழ, படையினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான வலிந்த தாக் குதல்களின் வேறு சில பரிமாணங்களையும் ஆராய வேண்டும்.
அரச அதிகாரத்தினை வலுவூட்ட சில படை நடவடிக்கைகளும் படைத்தரப்பு நிகழ்ச்சி நிர லிற்கேற்ப சில தாக்குதல்களும் தற்போது மேற் கொள்ளப்படுவதனை நோக்குவோம்.
ஜெயசிக்குறுச்சமர், இவற்றிலிருந்து சற்று வேறுபடுகிறது. 70 கி. மீற்றர் ஏ9 நெடுஞ்சா லையை ஊடறுத்து, வன்னியைப் பிளக்கும் படையின?ன் நகர்வினை ?றியடிப்பதற்கும், மைய இருப்பினை தக்க வைப்பதற்கும் மேற் கொள்ளப்பட்ட பெருஞ்சமரே ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர்.
1997 மே மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமான ஜெயசிக்குறு நடவடிக்கையானது வவுனியாவி லிருந்து ஓமந்தைவரை நகர்ந்து, மணலாற்றிலி ருந்து நெடுங்கேணியைக் கைப்பற்றி, இறுதி யில் ஒன்று சேரும் இருபடைப் பிரி வுகளையும் இணைத்து கிளிநொச்சிவரை செல்வதை முலோபாயமாகக் கொண்டிருந்தது.
ஆனாலும் அதே ஆண்டு ஜுன் 10 ஆம் திகதி பா?ய தாக்குதலொன்றை பின் தளமாக விளங்கிய தாண்டிக்குள படைத்தளம் மீது தொடுத்து பெரும் அழிவினை இராணுவத் தரப் பிற்கு வழங்கினார்கள் விடுதலைப் புலிகள்.
அதனைத் தொடர்ந்து பெரியமடு, ஓமந்தை, புளியங்குளம் சந்தி போன்ற பகுதிகளில் ஆளணி, படைக்கல இழப்புகள் இராணுவத் தரப்பிற்கு ஏற்பட்டன.
இந்த நெடுஞ்சமரில் 53, 54, 55, 56 படைப் பிரிவினரோடு காவல் துறையினரும் இணைந்து கிட்டதட்ட 36 ஆயிரம்பேர் பங்கு இத்தரை அமைப்பை வரைபடத்தைப் பார்த்தால், அது முக்கோண வளவில் அமைந்திருக் கும்.
இதேபோன்றதொரு வரைபட பிரதியாக் கத்தை தற்போதைய மன்னார் கள?னையில் தரிசிக்கலாம். ஜெயசிக்குறுச் சமர் பற்றி இங்கு குறிப்பிடப்படும் பின்புலத்தை மன்னாரோடு ஒப்பிட்டால் சில தெளிவுகள் பிறக்கும்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால் நவம்பர் 2 இல் ஆரம்பமான புலிகளின் வலிந்த நில மீட்புப் தாக்குதல் நவம் பர் 6 உடன் முடிவடைந்தது.
ஒட்டுசுட்டான், மாங்குளம், புளியங்குளம் உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பொன்று 5 நாள் சமரில் மீட்கப்பட்ட வரலாறு, உருவாகப் போ கும் புதிய வரலாறுகளின் தொடக்கப் புள்ளியா கக் கொண்டால் மன்னாரும் மணலாறும் இடை நிலைப் புள்ளிகளே.
தாய்ச் சமர் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்ட பல தளபதிகள், இன்னமும் முன்ன ரங்க கள முனைகளில் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள். ஆகவே சகல பின்னகர்வுகளும் பெரிய பாய்ச்சலிற்கான முன்னறிவிப்பு என்ப தனை ஜெயசிக்குறுவிலிருந்து கற்றுக் கொள்ள லாம்.
--------------------------------------இதயச்சந்திரன்---------------------------------------
Saturday, 10 May 2008
இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடுமென்கிற கதையாடல் தொடர, மறுபுறத்தே தென்னிலங்கையில் பட்டினிப் போராட்டம் அரங்கேறுகிறது!!!-
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
VETRYIYAI NAALAI SARITHIRAM SOLLUM!
IPPADAI THORKIN EPPADAI VELLUM?
Go the Tigers !!!!! We will win, because we have a leader of one in hundread millions !!!!!!
MILITARY SOLUTION WILL BRING DEATH,SUFFERING AND DESTRUCTIONS.
SRI LANKA IS THE ONLY COUNTRY IN THE WORLD, WHICH BOMBARDS IT'S OWN CITIZENS IN THE NAME OF DEMOCRACY.
Post a Comment